search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனடா குடியுரிமை"

    கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பெறுவதற்காக இந்த ஆண்டு அக்டோபர் மாதம் முடிய 15 ஆயிரம் இந்தியர்கள் கனடா நாட்டு குடியுரிமை பெற்று இருப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. #Canadiancitizenship
    மும்பை:

    கனடா நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பெறுவதில் இந்தியர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதற்காக கனடா நாட்டு தூதரகத்தின் மூலம் விண்ணப்பித்து வருகிறார்கள். கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக 3 விதமான தேர்வுகள் நடத்திய பின்பே அனுமதி வழங்கப்படுகிறது.

    இதில் தனியார் நிறுவனங்கள் மூலம் விண்ணப்பித்து தேர்வு எழுதுகிறார்கள். ஆயிரக்கணக்கான இந்திய இளைஞர்கள் இதற்காக விண்ணப்பித்து தேர்வு எழுதி வருகிறார்கள்.

    இதற்காக முதலில் நிரந்தர குடியுரிமை (பி.ஆர்) பெற வேண்டும். இந்த ஆண்டு அக்டோபர் மாதம் முடிய 15 ஆயிரம் இந்தியர்கள் கனடா நாட்டு குடியுரிமை பெற்று இருப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இது கடந்த 2017-ம் ஆண்டைக் காட்டிலும் 50 சதவீதம் அதிகம் ஆகும்.

    கனடா குடியுரிமை பெறுவதில் பிலிப்பைன்ஸ் நாட்டினர் தான் முதலிடத்தில் உள்ளனர். அதற்கு அடுத்த இடத்தை இந்தியர்கள் பிடித்துள்ளனர்.

    இந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டினர் 15,600 பேருக்கு கனடா குடியுரிமை வழங்கப்பட்டு உள்ளது. இது கடந்த ஆண்டைக்காட்டிலும் 11 சதவீதம் அதிகரித்துள்ளது. #Canadiancitizenship
    ×